ஆரியை பற்றி பேசும் ரம்யா! அடுத்த வாரம் நாமினேஷனில் இடம் பெறுவாரா?
ஆரியை பற்றி பேசும் ரம்யா! அடுத்த வாரம் நாமினேஷனில் இடம் பெறுவாரா?
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனிதா வெளியேற்றப்பட்ட நிலையில், அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் ஆரியை எதிர்த்து சண்டை போட்டவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்றைய ப்ரோமோவில் ஆரி குறித்து ரம்யா மற்றும் ஷிவானி இது குறித்து பேசி வருகிறார்கள். அப்போது ரம்யா கூறும்போது ஆரி எல்லாமே சரியாக செய்ய வேண்டுமென்று நினைக்கின்றார்.
ஆனால் ஆடியன்ஸ்களுக்கு அது பிடிக்கிறதா இல்லையா என்பது என்னுடைய சந்தேகமாக உள்ளது. நேற்று கால் செய்தவர் கூறியதில் இருந்து ஆரியை மக்களுக்கு பிடிக்கின்ற மாதிரி எனக்கு எந்த கோணத்திலும் தோன்றவில்லை என்று கூறினார். இதற்கு பதில் கூறிய ஷிவானி, அவருக்கு என்று வரும்போது தன்னலத்தோடு மற்றவர்களை குற்றஞ்சாட்டி அவர் தப்பித்து விடுகிறார் என்று கூறுகிறார். அப்போது ரம்யா கிடைக்கிற கேப்பில் எல்லாம் தன்னுடைய பலத்தையும் மற்றவர்களின் பலவீனத்தையும் ஆரி சொல்லி வருகிறார் என்று எனக்கு தோன்றுகிறது.
எந்த கேப் கிடைத்தாலும் அதை யூஸ் பண்ணுகிறார் என்று ரம்யா கூறும் போது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மற்றவர்களை தப்பாக பேசுகிறார் என்று ஷிவானி கூறுகிறார். ஆரியை கட்டம் கட்டியவர்கள் வெளியேறி கொண்டிருப்பதை இன்னும் புரிந்து கொள்ளாமல் ரம்யா, ஷிவானி அவரை பற்றி பேசி வருவதால், பார்வையாளர்கள் இந்த வாரம் ரம்யா, ஷிவானியை வெளியேற்றுவார்கள் என்று தெரிகிறது.
#Day85 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Z1uv4d4AKQ
— Vijay Television (@vijaytelevision) December 28, 2020