பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி.!
மகாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. அப்போது ஆரம்ப கட்டத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் பலருக்கு தொற்று பரவியது. இதில் பொதுமக்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் பலரும் உயிரிழந்தனர். இதனிடையே தொற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதனால் தொற்றின் வேகம் படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது அம்மா நீது கபூர் தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.