Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பாடகி எழுதிய ராப் பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்!

ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பிரபலமானது.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பாடகி எழுதிய ராப் பாடல்: சமூக வலைதளங்களில் வைரல்!
X

KarthigaBy : Karthiga

  |  22 July 2023 10:00 PM IST

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ள பான் இந்தியா படம் 'ஜவான்'. இப்டத்தில் தீபிகா படுகோன் மற்றும் முக்கியமான இடங்களில் விஜய் சேதுபதி ,நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு ராப் பாடல் இடம் பெறுகிறது. இதை பாடகி ராஜகுமாரி எழுதி பாடி ஆடியுள்ளார்.


இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து ராஜகுமாரியை ஷாருக்கான் நேரில் அழைத்து பாராட்டினார். இவர்எழுதிய பாடல்கள் இதற்கு முன்பும் சில பாலிவுட் படங்களில் இடம்பெற்றுள்ளன. கிராமிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட அவர் புகழ் பெற்ற பல்வேறு இசை விழாக்களில் பங்கேற்றுள்ளார். உலகப் புகழ்பெற்ற இசை கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.


ராஜகுமாரி கூறுகையில் இந்த படத்துக்கு அழைத்த ஷாருக்கான், அட்லீ, அனிருத் ஆகியோருக்கு எனது நன்றி. இப்படம் வெளியாகும் வரை காத்திருப்பதற்கு பொறுமை இன்றி அளவு கடந்த உற்சாகத்தில் மிதக்கிறேன். உலகமே என் பாடலை ஆர்வத்துடன் கேட்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News