Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்றாவது முறையாக விஜய் தேவரகொண்டா உடன் இணையும் ராஷ்மிகா மந்தனா!

விஜய் தேவரகொண்டா நடிக்க இருக்கும் அவரது 12-வது திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மீண்டும் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மூன்றாவது முறையாக விஜய் தேவரகொண்டா உடன் இணையும் ராஷ்மிகா மந்தனா!

KarthigaBy : Karthiga

  |  26 Sep 2023 6:15 AM GMT

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12- வது படத்தை ஜெர்ஸி படத்தின் இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார் . சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார். சில சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடிப்பதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இப்படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் ஸ்ரீ லீலா வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், கீதா கோவிந்தம், டியர் காம்ரெட் படங்களை தொடர்ந்து மூன்றாம் முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாஜோடி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE :dinamalar.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News