Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் 17 முறை தான் நடனமாட தயார் - ஆர்வமுடன் காத்திருக்கும் ராம்சரண்

கடந்த வருடம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப்பெரிய

மீண்டும் 17 முறை தான் நடனமாட தயார் - ஆர்வமுடன் காத்திருக்கும் ராம்சரண்

Mohan RajBy : Mohan Raj

  |  15 Jan 2023 8:29 AM GMT

கடந்த வருடம் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் பல விருதுகளை சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு அள்ளி வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் இடம் பெற்ற நாட்டுக் கூத்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பாடல் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.




இந்தப் பாடலில் மரகதமணியின் இசையில் உருவானது மற்றும் இதில் ராம்சரணனும், ஜூனியர் என்.டி.ஆரும் ஹீக் ஸ்டெப்ஸ் முறையில் அதிவிரைவு நடனமாடியிருந்தார்கள். இந்த நடனத்தை பல கிரிக்கெட் வீரர்களும் ஹாலிவுட்டில் உள்ள சில நடிகர்களும் கூட ஆடு முயற்சித்து அதை சோசியல் மீடியாவில் வீடியோக்களாக வெளியிட்டு வந்தார்கள் என்பது ஆச்சரியமான ஒன்று.




தற்போது கோல்டன் குளோப் குரூப் விருது இந்த பாடலுக்கு கிடைத்தது. அதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ராம்சரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்து விட்டால் நாட்டுக் கூத்து பாடலுக்கு தொடர்ந்து 17 முறை நடனமாட தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்தப் பாடலுக்காக கிட்டத்தட்ட 100 விதமான வித்தியாசமான நடன அசைவுகளை முயற்சித்து பார்க்கப்பட்டன. அதில் தற்போது ராம்சரண் ஜூனியர் என்டிஆர் இருவரும் படத்தில் ஆடிய அந்த நடன அசைவுகளுக்காக 17 முறை ரிகர்சல் செய்து கொண்ட பின்னரே அந்த படம் காட்சி படமாக்கப்பட்டது. இதைக் குறிப்பிடும் விதமாகவே ராம்சரண் மீண்டும் 17 முறை தான் நடனமாட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News