Kathir News
Begin typing your search above and press return to search.

ஹாலிவுட்டிலும் கலக்கத் தயார் : ' அலியாபட்' எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பாலிவுட்டைத் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் கால் பதிக்க இருக்கிறார். அலியா பட் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்

ஹாலிவுட்டிலும் கலக்கத் தயார் :  அலியாபட் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

KarthigaBy : Karthiga

  |  4 Aug 2023 11:15 AM GMT

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும் அலியா பட் நடிகர் ரன்வீர் கபூரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ரன்வீர் சிங்குடன் அவர் நடித்த 'ராக்கி அவுர் ராணி கே பிரேம் கஹானி' படத்துக்கு, அவரது நடிப்புக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


அலியா பட் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். ' டாம் ஹார்பர்' இயக்கும் 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' என்ற ஆக்சன் படத்தில் கால் கடோட் ஜேமி டோர்னன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அலியா பட் கூறுகையில் படப்பிடிப்பின் போது ஆங்கிலத்தில் பேசுவது கடினமாக இருந்தது.


ஆங்கிலத்தில் பேசுவேன் என்றாலும் ஹிந்தியில் தான் அதிகம் வசனம் பேசி நடித்துள்ளேன். ஆனால் இப்போது முழுவதுமாக ஆங்கிலத்தில் பேசி நடிப்பதே எனக்கு வித்தியாசமாக இருக்கிறது. மற்றபடி எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றார். அலியாபட் தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News