Kathir News
Begin typing your search above and press return to search.

ரெக்கார்டிங் தியேட்டர் உடைப்பு.. அதிர்ச்சியில் இளையராஜா.!

ரெக்கார்டிங் தியேட்டர் உடைப்பு.. அதிர்ச்சியில் இளையராஜா.!

ரெக்கார்டிங் தியேட்டர் உடைப்பு.. அதிர்ச்சியில் இளையராஜா.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2020 12:54 PM GMT

இளையராஜா பயன்படுத்தி வந்த ரெக்கார்டிங் தியேட்டரின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றி விட்ட காரணத்தினால் தியானம் செய்ய ஒரு நாள் மட்டும் அனுமதிக்கோரியும் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக நடைபெற்றது.

அப்போது பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் எங்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்றால் இளையராஜாவையும் அவரது உதவியாளர்களையும் ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்க தயார் என்று தெரிவித்தனர்.

அதேசமயம் அவர் இசையமைத்த பகுதியின் இடத்தை ஒருபோதும் உரிமை கொண்டாடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட இளையராஜா தனது வழக்கை வாபஸ் பெற்றார்.

தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு ஒரு நாள் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதாவது காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் அவர் தியானம் மேற்கொள்வது மற்ற வேலைகளை செய்து கொள்ளும்படி நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து இளையராஜாவுக்கு சொந்தமான இசைக்கருவிகள் எடுத்துச்செல்ல இளையராஜா தரப்பு வழக்கறிஞர்களும், பிரசாத் ஸ்டூடியோ தரப்பு வழக்கறிஞர்களும் காலை 9.30 மணியளவில் பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்றனர்.

ஆனால் இளையராஜா ஸ்டூடியோவிற்கு வராத நிலையில், அவர் பயன்படுத்திய இசைக்கருவிகளைக் கொண்டு செல்ல இரண்டு வாகனங்கள் மட்டும் அங்கு வந்திருந்தது. இது குறித்து அங்கு வந்துள்ள இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள் கூறும்போது, இளையராஜா பயன்படுத்தி வந்த ரெக்கார்டிங் தியேட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் பயன்படுத்திவந்த இசைக்கருவிகள் உள்ளே இருக்கிறதா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறியிருந்தனர்.

இதுப்பற்றி தகவல் அறிந்த இளையராஜா மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறினர். எனவே அவர் இன்று பிரசாத் ஸ்டூடியோவிற்கு வருகை தருவாரா என்பது குறித்து தெரியவில்லை என்றும் கூறினர். இது குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News