Kathir News
Begin typing your search above and press return to search.

எஸ்ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எஸ்ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

எஸ்ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
X

Amritha JBy : Amritha J

  |  26 Feb 2021 12:09 AM IST

செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல வருடங்கள் ஆன நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகனான எஸ்ஜே.சூர்யா நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

அந்த பதிவில் கூறியுள்ளது: இப்படத்தில் ராமசாமி என்ற கேரக்டரில் நடித்துள்ள நிலையில் பெரிய திரையில் ராமசாமியை நீங்கள் மார்ச் 5-ஆம் தேதி பார்க்கலாம் என்றும் 'இது வேற விளையாட்டு' என்றும் அவர் குறிப்பிட்டு,இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்த படம் செல்வராகவனுக்கு முக்கியமான படம் என்ற பெயரெடுத்து தரும் என்றும் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News