Kathir News
Begin typing your search above and press return to search.

கடுப்பின் உச்சத்தில் ரியோ: உசுப்பேத்திய அனிதா.!

கடுப்பின் உச்சத்தில் ரியோ: உசுப்பேத்திய அனிதா.!

கடுப்பின் உச்சத்தில் ரியோ: உசுப்பேத்திய அனிதா.!

Amritha JBy : Amritha J

  |  14 Dec 2020 5:59 PM GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய நிலையில் நிஷா வெளியேற்றப்பட்டதை அடுத்து அன்பு குறுப்பினர் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர். இன்னிலையில் அர்ச்சனாவின் அன்பு குரூப்பை ஒரே ஒரு வாரம் கேப்டனாக இருந்த அனிதா, சுக்குநூறாய் உடைத்துவிட்டதாக நெட்டிசன்களின் பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில், ஏற்கனவே ரமேஷ், வெளியேற்றிவிட்ட நிலையில் தற்போது அனிதாவின் அடுத்த டார்கெட் ரியோ மீது திரும்பியுள்ளது.

நாமினேஷனின் போது ரியோ தன்னை பற்றி கூறிய ஒரு கருத்துக்கு அனிதா விளக்கம் கேட்கிறார். நாமினேஷனின்போது கூறியதை என்னிடம் நேரடியாக கேட்டிருக்கலாமே, நாமினேஷனின்போது கேட்டால் நான் பதில் சொல்ல மாட்டேன் என்ற நினைப்பா என்று கேட்க, நான் உன்னைத்தான் கூறினேன், நேரடியாகத்தான் கூறினேன் என்று ரியோ சமாளித்து அங்கிருந்து விலக முயற்சித்தார்.

அப்போது அனிதா ஏன் தைரியம் இல்லாமல் போறிங்க என உசுப்பேத்த, உடனே சூடான ரியோ யாருக்கு தைரியம் இல்லை, நான் என்ன வீட்டைவிட்டா வெளியே போயிட்டேன் என்று கத்த, அதற்கு அனிதா ஏன் இப்ப கத்துறீங்க என்று அமைதியாக கேட்கிறார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத ரியோ, இனிமே தைரியம் இல்லைன்னு சொல்ர வேலையெல்லாம் வச்சுக்கிடவேண்டாம், பாத்து பேசுங்க என்று கூறுகிறார். வழக்கம்போல் இந்த சண்டையை மற்ற ஹவுஸ்மேட்ஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர்.இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் இனிவரும் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News