Kathir News
Begin typing your search above and press return to search.

பாலாஜியை ஆதரிக்கும் ரியோ, சோம் - கடுப்பில் ஆரி ரசிகர்கள்!

பாலாஜியை ஆதரிக்கும் ரியோ, சோம் - கடுப்பில் ஆரி ரசிகர்கள்!

பாலாஜியை ஆதரிக்கும் ரியோ, சோம் - கடுப்பில் ஆரி ரசிகர்கள்!
X

Amritha JBy : Amritha J

  |  6 Jan 2021 9:47 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் ஓரு வாரத்தில் வெற்றியாளர் யார் என்று நிர்ணயிக்கும் நிலையில் இதுவரை ஆரிக்கே அதிக ரசிகர்களும், அதிக ஓட்டுக்களும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்களின் வருகைக்கு பின் ஆரிக்கு மிகப்பெரிய ஆதரவு வெளியில் இருப்பது அனைவருக்கும் தெரிந்து விட்டதால் ஆரியை கட்டம் கட்ட பாலாஜி மட்டுமன்றி கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் முடிவு செய்து விளையாடி வருகின்றனர். எனவே ஆரியுடன் கிட்டத்தட்ட அனைவருமே மோதல்களுடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆரிக்கு இணையாக விளையாடுபவர் பாலாஜி என்பதை புரிந்துகொண்டு பாலாஜிக்கு ஆதரவாகவும் ஆரியை கட்டம் கட்டும் வகையிலும் ரியோ மற்றும் சோம் பேசும் காட்சிகள் இன்றைய இரண்டாம் ப்ரோமோவில் உள்ளது.

இந்த உரையாடலில், உறவினர்கள் வந்தபோது பழைய பாலாவை காணும், பழைய பாலாவை காணும் என்று சொல்லி சொல்லியே அவனை ஒரு மாதிரியாக ஆக்கி விட்டார்கள் என்றும், அதனால் எப்பொழுது பார்த்தாலும் பாலா சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றார் பாவம் என்றும், தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பாலா இது மாதிரி ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் சோம் கூறுகிறார், ரியோவும் அதை ஒப்புக் கொள்கிறார். மேலும் சண்டை உள்ளிட்டவற்றை தவிர்த்து பார்த்தால் பாலா மிகவும் சரியாகத்தான் விளையாடி இருக்கிறார் என்று சோம் கூற அதற்கு ரியோ ஒரு லெவலுக்கு மேல் தான் பாலா இந்த கேம் உள்ளே வந்து இருக்கிறார் என்று கூறுகிறார்.

பாலாவின் இந்த நிலைக்கு பாலா மீது மட்டும் தவறல்ல, எல்லோர் மீதும் தப்பு தான். கொஞ்சம் அதிகமான தப்பு சில பேர் கிட்ட இருக்கு. அவர்கள் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை என்றும் சோம் கூறுகிறார். சோம் சொல்ல விரும்பவில்லை என்று கூறிய நபர்கள் யார் என்பதை இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு புரிந்திருக்கும் என்பது ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News