Kathir News
Begin typing your search above and press return to search.

மாதவனின் 'ராக்கெட்டரி' படத்திற்கு கிடைத்த சர்வதேச அளவிலான பெருமை

மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள 'ராக்கெட்டரி' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

மாதவனின் ராக்கெட்டரி படத்திற்கு கிடைத்த சர்வதேச அளவிலான பெருமை

Mohan RajBy : Mohan Raj

  |  5 May 2022 11:45 AM GMT

மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள 'ராக்கெட்டரி' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.




இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக ராக்கெட்ரி என்ற படத்தை மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். வரும் ஜூலை 1'ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது, இந்நிலையில் இப்படம் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது என்பதை இந்திய கலாச்சார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளது.




இதுகுறித்து மாதவன் கூறியிருப்பதாவது, 'நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் நான் நம்பி நாராயணன் கதையை மட்டும் சொல்ல விரும்பினேன் ஆனால் தற்பொழுது நடப்பது எல்லாம் என்னால் நம்பமுடியவில்லை கடவுளின் ஆசியுடன் நாங்கள் நீண்ட நேரம் காத்திருந்தோம். படத்திற்கு நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களை பார்க்க நான் நன்றியுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் ஒரு அறிமுக இயக்குனராக எனக்கு அதிக பதட்டமாக இருக்கிறது இந்தப்படம் இந்தியாவை பெருமைபடுத்தும் என நான் நம்புகிறேன்' என்றார் மாதவன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News