உலக பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்து சாதனை படைத்த ராக்கி பாய் - 5'ம் இடத்தில் 'கே.ஜிஎ.ப் 2'
KGF 2 Collection Records

கன்னடத் திரையுலகில் இருந்து வந்த ஒரு படம் உலக சினிமா வரலாற்றில் இடம்பிடித்து விட்டது அதுதான் 'கே.ஜிஎ.ப் 2'.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சீனிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீணா டாண்டன் நடிப்பில் வெளியான 'கே.ஜிஎ.ப் 2' திரைப்படம் இந்திய சினிமா சரித்திரத்தில் மட்டுமல்லாது உலக சினிமா வசூல் சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்துவிட்டது. ஏப்ரல் 14'ஆம் தேதி வெளியான இந்தப் படம் உலக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 70 மில்லியன் யு.எஸ் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 500 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
ஏப்ரல் 22'ஆம் தேதி முதல் 24'ஆம் தேதி வரையிலான உலக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 19 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் 142 கோடி வசூலித்து ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக ஒரு கன்னடப் படம் இந்த அளவிற்கு வசூல் சாதனை நிகழ்த்தியது இதுவே முதல் முறை என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக இதுவரை 850 கோடி ரூபாய் வசூலை 'கே.ஜிஎ.ப் 2' திரைப்படம் குவித்தது குறிப்பிடத்தக்கது.