Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்.ஆர்.ஆர்.படத்தின் இரண்டாம் பாகம் - ஏகோபித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஆஸ்கர் விருதை வென்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்.ஆர்.ஆர்.படத்தின் இரண்டாம் பாகம் - ஏகோபித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

KarthigaBy : Karthiga

  |  11 July 2023 4:45 AM GMT

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதையும் கோல்டன் குளோப் விருதையும் வென்று உலக அளவில் கவனம் பெற்றது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்த நிலையில் ஆர். ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அப்படத்தின் திரைக்கதை ஆசிரியரும் ராஜமௌலியன் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறும் போது ஆர். ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர் இரண்டாம் பாகம் படத்திலும் நடிப்பார்கள். ஹாலிவுட் தரத்தில் இந்த படம் இருக்கும் முன்னணி ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராஜமவுலி அல்லது அவரது மேற்பார்வையில் வேறு யாராவது இயக்கலாம் என்றார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது . முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்தையும் ராஜமௌலி இயக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News