ப்ரமோஷனில் மாஸ் காட்டப்போகும் ஆர்.ஆர்.ஆர் படக்குழு !
பாகுபலி வசூலை முந்தும் முயற்ச்சியில் ராஜமௌலி இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் புது வித ப்ரோமோஷனை முன்னெடுத்துள்ளது படக்குழு.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இந்திய அளவில் 5 மொழிகளில் தயாராகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட் போன்றோர் நடித்து வருகின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பு உக்ரைனில் நடந்து வருகிறது.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷனை முழுவீச்சில் படக்குழுவினர் கையில் எடுத்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக ஆர்.ஆர்.ஆர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பொறுப்பை இன்று முதல் ஜுனியர் என்.டி.ஆர் ஏற்றுக் கொள்கிறார். அதில் அவரது பட அனுபவங்களையும், சில தகவல்களையும் அவர் வெளியிட உள்ளார். அடுத்த சில நாட்களுக்கு இது தொடர உள்ளதாம். அதற்கடுத்து ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் அதைச் செய்ய உள்ளார்களாம்.
பாகுபலி வசூலை முந்தும் முயற்ச்சியில் ராஜமௌலி இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.