Kathir News
Begin typing your search above and press return to search.

'ருத்ர தாண்டவம்' படத்திற்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் !

திரௌபதி படத்தை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார். அது மட்டுமின்றி பிரபல நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ருத்ர தாண்டவம் படத்திற்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் !

ThangaveluBy : Thangavelu

  |  7 Sep 2021 1:01 PM GMT

திரௌபதி படத்தை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ருத்ர தாண்டவம்'. இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார். அது மட்டுமின்றி பிரபல நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சின்னத்திரையில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து திரைக்கு வருவதற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு சுமார் 50 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்நிலையில், 'ருத்ர தாண்டவம்' படத்தின் முதல் பாடல் வருகிற செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் மோகன் ஜி சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், 'அம்மாடி' எனத் தொடங்கும் இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். ஜுபின் இசையமைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Director Mohan G Facebook

Next Story
கதிர் தொகுப்பு
Trending News