Kathir News
Begin typing your search above and press return to search.

ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான் - புது பொலிவுடன் மீண்டும் வருகிறான் ஆளவந்தான்

நடிகர் கமலஹாசன் தாயம் என்ற கதையை மையமாக வைத்து கடந்த 1984இல் ஆளவந்தான் படத்தின் திரைக்கதையை உருவாக்கினார்.

ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான் - புது பொலிவுடன் மீண்டும் வருகிறான் ஆளவந்தான்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2023 12:25 PM GMT

நடிகர் கமலஹாசன் தாயம் என்ற கதையை மையமாக வைத்து கடந்த 1984இல் ஆளவந்தான் படத்தின் திரைக்கதையை உருவாக்கினார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார் என்றாலும் படம் முழுவதும் கமலின் டச்தான் இருக்கும். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்திலும் மிரட்டி இருப்பார் கமலஹாசன். மனிஷா கொய்ராலா, ரவீனா டாண்டன், சரத் பாபு, அனுஹாசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 2டி அனிமேஷன் காட்சிகள் பெரும் பாராட்டுகளை பெற்றது. 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை துவங்கினார் தயாரிப்பாளர் தாணு. ஆனால் இப்படம் முடியும் பொழுது 20 கோடி ரூபாயில் முடிந்தது. தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் படம் உருவானது. இருப்பினும் இப்படம் பெரும் தோல்வியையே தழுவியது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தானும் விரைவில் புதிய டிஜிட்டல் ஒளி அமைப்பு ஆளவந்தான் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 1000 திரையரங்குகள் உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News