Kathir News
Begin typing your search above and press return to search.

சமந்தா-சைதன்யா விவாகரத்து உண்மையா ?

Cinema News.

சமந்தா-சைதன்யா விவாகரத்து உண்மையா ?
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 Sep 2021 10:00 AM GMT

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து பற்றிய கிசுகிசுக்கள் பல உலாவுகின்றன.




தென்னிந்தி திரையுலகில் பெரிய குடும்பம் என்றால் அதில் ஒன்று நாகார்ஜுனா அக்னிநேனி குடும்பம், தெலுங்கில் இவர்களின் பெயர் மிகவும் பிரபலமானது. இந்த குடும்பத்தில் நாகர்ஜுனா மருமகளாக சைதன்யா'வை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை துவங்கினார் நடிகை சமந்தா.






தற்பொழுது சமந்தா-சைதன்யா திருமணம் விவாகரத்து விவகாரம் இணையங்களில் செய்தியாக உலா வருகிறது. சமந்தாவின் கணவர் நாக சைதன்யா நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நாகசைதன்யா டுவிட்டரில் பகிர்ந்த அந்தப் பதிவை ரிடுவீட் செய்து, படத்தின் நாயகி சாய் பல்லவியை மட்டும் 'டேக்' செய்து, 'வின்னர், குழுவினருக்கு நன்றி' என சமந்தா வாழ்த்தியிருந்தார். அதில் கூட அவர் நாகசைதன்யாவை ஏன் 'டேக்' செய்யவில்லை, அவருக்கென தனியாக ஏன் வாழ்த்து கூறவில்லை என்ற சந்தேகமும் எழுந்து விவாகரத்து விஷயம் உண்மையோ என பரவலாக பேசிக்கொள்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News