Kathir News
Begin typing your search above and press return to search.

சமந்தா விரும்பிய ரசிகையின் ட்வீட் - ஏன் தெரியுமா?

காலம் காலமாக ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே சினிமா இருந்து வருகிறது. எப்போதோ ஒருமுறை தான் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளிவரும்.

சமந்தா விரும்பிய ரசிகையின் ட்வீட் - ஏன் தெரியுமா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2023 11:14 AM GMT

காலம் காலமாக ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே சினிமா இருந்து வருகிறது. எப்போதோ ஒருமுறை தான் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளிவரும். இந்நிலையில் கடந்த வாரம் 2022ம் ஆண்டின் கடைசி வெளியீடாக வெளிவந்த ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட் போன்ற படங்கள் வெளிவந்து உள்ளது. இது ஹீரோயின்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்ட படங்கள், இதற்கு முன் வாரம் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கனெக்ட் படமும் அப்படிப்பட்ட ஒரு படம்தான்.




வெற்றி, ராகேஷ் தியேட்டர் காம்ப்ளஸ்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரமாண்டமான திரையரங்குகள். இத்திரையரங்குகளில் கனெக்ட், ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஆகிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தியேட்டர் முன்பாக அந்த பேனர்கள் இடம்பெற்றுள்ளன. இதை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கை கடக்கும் பொது பார்த்த ஒரு ரசிகர், பெண்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களின் பேனர் இருப்பதை நானும் எனது சகோதரியும் பார்த்தோம்.

பத்து வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. தமிழ் சினிமா எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளது. வழக்கமாக ஆண்களின் வலிமையை காட்டும் படங்களின் பேனர்கள்தான் வெற்றி திரையரங்கில் வரிசைகட்டி இருக்கும். இத்தியேட்டர்களில் எங்களது குழந்தை காலத்தின் பாதியை கழித்த எங்களுக்கு இது எப்படிப்பட்ட மகிழ்ச்சி என்பதை சொல்லிவிட முடியாது, என்று ஒரு நீண்ட கருத்தை பதிவிட்டிருந்தார்.




இதை நடிகை சமந்தா தன்னுடைய ட்டுவீட்டரில் அந்த ரசிகரின் டுவீட்டை ரிடுவீட் செய்தார். பெண்களின் எழுச்சி எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார். நடிகை சமந்தா கோரோம்பெட்டையை அடுத்த பல்லவரத்தைச் சேர்ந்தவர், இவர் நடிகையாவதற்கு முன்பாக இந்த தியேட்டர்களில் பல படங்கள் பார்த்திருக்கலாம். அதனால் தான் இதை ரிடுவீட் செய்திருக்கிறார் போலிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News