பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய பின் சனம்ஷெட்டியின் முதல் பதிவு.!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய பின் சனம்ஷெட்டியின் முதல் பதிவு.!
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சனம்ஷெட்டி வெளியேற்றப்பட்டதை பொருக்க முடியாமல் இருக்கின்றனர். அந்த வகையில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனம் அவர் மீது இருந்தாலும் அவர் தைரியமாக தனது கருத்தை முன்வைப்பதில் உறுதியாக இருந்தார் என்றும் அவர் அளவுக்கு எந்த ஒரு கருத்தையும் தைரியமாக கூறியவர் பிக்பாஸ் வீட்டில் வேறு யாரும் இல்லை என்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சனம்ஷெட்டியின் வெளியேற்றம் குறித்து கூறிய நெட்டிசன் ஒருவர் பாசிட்டிவ் எண்ணத்தோடு வந்து மக்களின் மனதை வெற்றி பெறுவது என்பது கஷ்டம் இல்லை. ஆனால் நெகட்டிவ் சாயலுடன் வந்து பாசிட்டிவ் ஆக மாறி மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது ஒரு தனி கெத்து குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சனம் நெகிழ்ச்சியுடன் கூறியபோது இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும் என்னை ஆதரித்த அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி என்று பதிவு செய்துள்ளார்.மேலும் இதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.