Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த சரத்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயது அடைந்த பிறகும் ஹீரோவாக நடித்து விஜய்,

சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த சரத்குமார்

Mohan RajBy : Mohan Raj

  |  8 Jan 2023 11:29 PM GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயது அடைந்த பிறகும் ஹீரோவாக நடித்து விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கே டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.




திரையுலகில் ரஜினியின் வசூல் சாதனையை இதுவரை எந்த நடிகராலும் முறியடிக்கவில்லை என்ற கருத்துக்களும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சரத்குமார், நான் நடித்த சூரியவம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே விஜய் தான் அடித்த சூப்பர் ஸ்டார் என்று கூறினேன் என சமீபத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு பட இசைவிழா மேடையில் நினைவுபடுத்தினார்.

ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார், விஜய் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்ற சரத்குமாரின் கருத்துக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சரத்குமார் வாரிசு விழா மேடையில் பேசியதையும் பலரும் சுட்டிக்காட்டினார்கள். இந்நிலையில் விஜய்யின் வளர்ச்சியை பார்த்து அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நான் சூரியவம்சம் படத்தின் வெற்றி விழாவில் கூறியிருந்தேன்.




அதைத்தான் வாரிசு படத்தின் இசை விழாவிலும் சொன்னேன் என்று நடிகர் சரத்குமார் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, ரஜினிகாந்த் தற்போதைய சூப்பர் ஸ்டார் இல்லை, விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று நான் சொல்லவில்லை, அஜித்குமார் தான் சூப்பர் ஸ்டார் என்றும் சொல்லவில்லை. அமிதாப்பச்சன் சூப்பர் ஸ்டார் தான். ஷாருக்கானும் சூப்பர் ஸ்டார் தான், அந்த வகையில் அவர்தான் சூப்பர் ஸ்டார் இவர் தான் சூப்பர் ஸ்டார் என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் சாதிக்கும் ஒவ்வொரு நடிகர்களுமே சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தான் என்ற கோணாத்திலே அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நான் குறிப்பிட்டுயிருந்தேன் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News