Begin typing your search above and press return to search.
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான விளையாட்டு வீரர்கள்: நடிகர் சரத்குமார் ட்விட்டரில் வாழ்த்து.!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நடிகர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By : Thangavelu
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு நடிகர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேவதி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் 4*400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்து உலக அரங்கில் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றிவாகை சூட மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story