Kathir News
Begin typing your search above and press return to search.

"வாத்தியாரே இது ரத்த பூமி" - 'ரங்கன் வாத்தியாரை' அறிமுகம் செய்த 'கபிலன்'.

Cinema News.

வாத்தியாரே இது ரத்த பூமி - ரங்கன் வாத்தியாரை அறிமுகம் செய்த கபிலன்.

Mohan RajBy : Mohan Raj

  |  26 Aug 2021 6:45 AM GMT

"வாத்தியாரே! இதான் ட்விட்டர்" என கூறி 'கபிலன்' ஆர்யா 'ரங்கன் வாத்தியார்' பசுபதியை சமூக வலைதளமான ட்விட்டருக்கு அதிகாரப்பூர்வமாக அழைத்து வந்துள்ளார்.





கடந்த மாதம் ஓ.டி.டி'யில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி நடிப்பில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை', அரசியல், விளையாட்டு என கலந்துகட்டி கலவையான விமர்சனங்களை பெற்ற படம் இது. இதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சமூக வலைதளத்தில் மீம் டெம்ப்ளேட்களாக வைரலாக இன்று வரை வலம் வருகின்றன.




இந்நிலையில் சமூக வலைதளத்தில் அதிகம் ஈடுபாட்டுடன் நேரம் செலவிடும் ஆர்யா தனது 'வாத்தியாரான' பசுபதியை அதிகாரப்பூர்வமாக ட்விட்டருக்கு அழைத்து வந்துள்ளார். இதனை பசுபதி ஐடி'யை குறிப்பிட்டு, "வாத்தியாரே இதான் ட்விட்டர், பாக்ஸிங்க விட ரத்த பூமி, உன் பேர்ல இங்க நிறைய பேர் இருக்காங்க ஒரிஜினல் இதான்'ன்னு உள்ள வந்த பாத்தியா! வா இந்த உலகத்தில் போவோம்" என பசுபதி ஐடியை குறிப்பிட்டு ட்விட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News