Kathir News
Begin typing your search above and press return to search.

உண்மை கதையில் சசிகுமாரின் புதிய படம்!

சசிகுமார் அடுத்ததாக ஒரு உண்மை சம்பவத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

உண்மை கதையில் சசிகுமாரின் புதிய படம்!
X

KarthigaBy : Karthiga

  |  20 Oct 2023 3:45 PM IST

கழுகு படத்தை எடுத்த பிரபலமான டைரக்டரின் புதிய படத்தில் மாறுபட்ட வேடத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். ஜெய் பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற லிஜோ மோல் ஜோஸ் நாயகியாக நடிக்கிறார் . சுதீர் நாயர் வில்லனாக வருகிறார். இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், கே.ஜி.எஃப் மாளவிகா, போஸ் வெங்கட், மோ. ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோரும் நடிக்கின்றனர். 1990களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

90 காலகட்ட கதை என்பதால் அந்த காலகட்டத்தை திரையில் கொண்டுவர படகுழுவினர கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த காலகட்டத்தை பிரதிபலிக்க மத்தியில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்ட அரங்க அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்த படத்தை விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிக்கிறார். இசை:ஜிப்ரான் ஒளிப்பதிவு என்.எஸ்.உதயகுமார்.

SOURCE : DailyThanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News