Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் கதையின் நாயகனாக சத்யராஜ்

சத்யராஜ் புதிதாக வெப்பம் என்ற திரைப்படத்தில் அதிரடியான கதையின் நாயகனாக நடிக்க உள்ளார்.

மீண்டும் கதையின் நாயகனாக சத்யராஜ்

KarthigaBy : Karthiga

  |  28 July 2023 5:45 PM GMT

சத்யராஜ் கதை நாயகனாக நடிக்கும் புதிய படம் 'வெப்பன்' இதில் ராஜீவ் பிள்ளை, ராஜுமேனன் , வசந்த் ரவி கனிகா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை குகன் சென்னியப்பன் டைரக்ட் செய்கிறார். இவர் ஏற்கனவே வெள்ளை ரோஜா என்ற வெப் தொடரை இயக்கிய பிரபலமானவர். படம் பற்றி அவர் கூறும்போது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் சத்யராஜ் இதில் இன்னொரு வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக உருவாகிறது. கதைக்களம் புதுமையாக இருக்கும்.


கேரளாவில் வயநாடு காட்டு பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.யானையுடன் ஒரு பாடல் காட்சியை சத்யராஜ் நடித்துள்ளார். இதற்காக சில நாட்கள் யானைகளுடன் பழகி பயிற்சி எடுத்து நடத்தி இருக்கிறார். கனிகா முதல் முதலாக கேங்ஸ்டர் ஆக நடிக்கிறார். அவரது நடிப்பு பேசப்படும் என்றார் . இசை ஜிப்ரான், ஒளிப்பதிவு பிரபு ராகவ் மில்லினியம் ஸ்டுடியோ எம்.எஸ். மன்சூர் தயாரித்துள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News