சத்யராஜின் மகள் தேர்தலில் போட்டி.? எந்த கட்சியில் தெரியுமா?
சத்யராஜின் மகள் தேர்தலில் போட்டி.? எந்த கட்சியில் தெரியுமா?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் சத்யராஜின் மகள் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது. வேறு எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் எழுகிறது. தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைந்த பிறகு, நடைபெறுகின்ற முதல் சட்டமன்ற தேர்தல் இது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களான நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசனும் கூட இந்த தேர்தலில் களம் காணுகின்றனர்.
இந்த தேர்தல் தமிழக வாக்காளர்களுக்கு புதிய அனுபவமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே போன்று உச்ச நடிகர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு டஃப் கொடுப்பார்கள் என்பன பற்றி போக போகத்தான் தெரியவரும்.
இந்நிலையில், நடிகர் சத்தியராஜின் மகள் திவ்யாவும் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். மேலும் இவர் மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் ஏழைகளுக்கு உதவி புரிந்து வருகிறார்.
ஊட்டச்சத்து குறைவாகவுள்ள குழைந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சத்துமிக்க உணவுகளை வழங்கி வலுமிக்க குழந்தைகளாக மாற்றும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள திவ்யாவுக்கு அரசியலில் ஈடுபட வேண்டுமென்பது நீண்டகால ஆசை. ஆனால், இதுவரை எந்த கட்சியிலும் திவ்யா சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திவ்யா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், என் அரசியல் வாழ்க்கையில் தந்தையின் பெயரை, புகழை பயன்படுத்த மாட்டேன். ஆனால், என்னுடன் கை கோர்த்து தந்தை செயல்படுவார் என கூறியுள்ளார். இதனிடையே திமுகவுக்கு ஆதரவாக சத்யராஜ் பிரச்சாரம் செய்வதாக அவரது பெயர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அப்படி என்றால் திவ்யா திமுகவில் இணைந்து போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இன்னும் எத்தனை சினிமா நடிகர்கள், நடிகைகள் வர போகின்றார்களோ தெரியவில்லை.