என்னை நடிக்க விடாமல் தடுப்பது யார்? வேதனையுடன் வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகர்.!
பெரிதாக முதலீடு செய்து, பெரிய அளவில் படம் எடுக்கின்ற அளவில் தன்னிடம் பின்னணி இல்லை. எனது வாழ்க்கையில் இதுவரை எல்லாச் சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது. நீங்கள் மட்டும்தான்.
By : Thangavelu
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' சீரியல் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கார்த்திக் ராஜ். இவர் கடந்த ஆண்டு திடீரென செம்பருத்தி தொடரிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் எந்த ஒரு தொடரிலும் கார்த்திக் ராஜ் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை கார்த்திக் ராஜ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனைவருக்கும் வணக்கம். இந்த வீடியோவில் என்னுடைய அடுத்த 'புராஜெக்ட்' பற்றி பேச வேண்டும் என காத்திருந்தேன்.
ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் என்னைச் சிலர் எந்த புராஜெக்ட்டும் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் அரசியல் செய்து வருகின்றனர். அதில் சிலர் பின்னாடி இருந்து கொண்டு படம் நடிக்க முடியாதபடி செய்துவிட்டனர்.
மேலும், உன்னால் முடிந்தால் படம் நடித்துக் காட்டு என்று சவால் விட்டுள்ளனர். மக்களின் ஆதரவு இருந்தால் நல்ல படத்தில் நடிக்க என்னால் முடியும். இதனால் நம்பிக்கையுடன் கே ஸ்டுடியோஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். அடுத்த புராஜெக்ட் அதில்தான் செய்ய உள்ளேன்.
பெரிதாக முதலீடு செய்து, பெரிய அளவில் படம் எடுக்கின்ற அளவில் தன்னிடம் பின்னணி இல்லை. எனது வாழ்க்கையில் இதுவரை எல்லாச் சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது. நீங்கள் மட்டும்தான்.
எனவே உங்களால் முடிந்த சிறிய தொகை மற்றும் பெரிய அளவிலான தொகையை எனக்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் ஆதரவு அளித்தால் இது முடியும் என கார்த்திக் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.