இரவு முழுவதும் அதிகாரிகளால் விமான நிலையத்தில் உட்காரவைக்கப்பட்ட ஷாருக்கான் - ஏன் தெரியுமா?
நடிகர் ஷாருக் கான் ஏர்போர்ட்டில் சுங்க வரி காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
By : Mohan Raj
நடிகர் ஷாருக் கான் ஏர்போர்ட்டில் சுங்க வரி காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் நேற்று முன்தினம் இரவு மும்பை விமான நிலையத்தில் அவரும், அவருடன் வந்தவர்களும் இணைந்து இருந்த ஆடம்பர கைக்கடிகாரங்களுக்கு சுங்கவரி செலுத்தும் விவகாரத்திற்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விமானத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் 6.83 லட்சத்தை சுங்கவரி செலுத்த வேண்டும் என சுங்கவரித்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஷாருக்கான் நவம்பர் 11 அன்று ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டார். அங்கு சர்வதேச சினிமா மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்பிற்காக குளோபல் ஐகான் சினிமா மற்றும் கலாச்சார விருது வழங்கப்பட்டது. விழாவை முடித்து மும்பை சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் மூன்றில் தனியார் ஜெட் விமானத்தில் வந்திறங்கிய ஷாரூக்கானுடன் அவரது உதவியாளர்கள் வெளியேறும் போது சாமான்களில் சொகுசு கடிகாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
ஷாருக் கானின் கடிகாரம் சுமார் 18 லட்சம் மதிப்புள்ளதாகவும், ஆறு ஆடம்பர கைக்கடிகாரங்கள் அவரது உடைமைகளில் காணப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. அவற்றிற்கான சுங்கவரி செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டதாக தெரிகிறது மேலும் அவரது பாதுகாவலர் உட்பட அவருடன் வந்த அனைவரும் இரவு முழுவதும் விமான நிலையத்தில் அமரவைக்கப்பட்டு நேற்று காலையில் தான் விமான நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.