Begin typing your search above and press return to search.
லைகா'வின் மேல் முறையீடு - ஷங்கருக்கு தொடரும் சிக்கல் !

By :
இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் தொடுத்த வழக்கை மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளது.
தற்பொழுது ராம்சரண் - கியாரா அத்வானியை வைத்த தான் இயக்கும் படவேலைகளை தொடங்கிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். அதோடு இந்தபடத்தை செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார் இதனை முடித்த பிறகு ஹிந்தியில் அந்நியன் மறுபதிப்பை துவங்க இருக்கிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்து ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ஆதிகேசவலு அடங்கிய அமர்பு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனைதொடர்ந்து அந்த வழக்கில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வரும் சமயம் அது லைகா'விற்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில் இயக்குனர் ஷங்கர் ராம்சரண் படத்தை தொடர முடியாமல் போகலாம்.
Next Story