பிக்பாஸில் இன்று வந்த ப்ரோமோவில் குறும்படம் - கடும் கோபத்தில் ரியோ.!
பிக்பாஸில் இன்று வந்த ப்ரோமோவில் குறும்படம் - கடும் கோபத்தில் ரியோ.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முதல் அனைவருக்கும் 'பாட்டி சொல்லை தட்டாதே' என்ற ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. பாட்டி கதாபாத்திரத்தில் அர்ச்சனா நடித்தார். பின்னர் மூத்த மருமகன்,மூத்த மருமகள் அவர்களது பிள்ளைகள், இளைய மருமகன்,மகள்,மகன், என கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டது.
அதில் சோம், அர்ச்சனா, கேப்ரில்லா ஆகிய மூவரும் திருடர்களாக பாட்டியின் பத்திரத்தை திருடுவதாக பிக்பாஸ் அவர்கள் மூவருக்கும் கொடுத்தார்.நேற்று பத்திரத்தை சோம் திருடி பத்திரமாக ஒரு இடத்தில் வைத்த பின்னர் அனைவரும் பத்திரத்தை காணவில்லை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் மேல் பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தனர்.
அதை யார் எடுத்தார்கள் என்று நிரூபிக்கும் விதமாக பிக்பாஸ் போட்டியாளர் அனைவர்களுக்கும் சோம் பத்திரத்தை திருடியதை ஒரு குறும்படமாக போட்டு காண்பித்தார்.
அதைப்பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர். அதைப் பார்த்து கடுப்பான ரியோ,சோம்யை ஜாலியாக துரத்தி துரத்தி அடிப்பது போன்று ப்ரோமோ முடிந்தது.இதைப் பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்கள் இன்றைய நிகழ்ச்சி நன்றாக இருக்குமென்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.