பிரபல இயக்குனருடன் மீண்டும் இணைந்த சிம்பு?
பிரபல இயக்குனருடன் மீண்டும் இணைந்த சிம்பு?
By : Amritha J
நடிகர் சிம்பு தற்போது அவரது உடல் எடையை குறைத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக ஈஸ்வரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிம்புவின் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் ஒன்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்த புகைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் சிம்புவின் தாயார் உஷா, சிம்பு, ஐசரி கணேஷ், ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பு நடிக்கவுள்ள பத்து தல படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனர் கௌதம் மேனன் அவர்களுடன் சிம்பு இணைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா, விண்ணைத்தாண்டி வருவாயா, திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அறிந்ததே. மேலும் தற்போது கமிட்டாகி உள்ள படம் வெற்றி அடைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
On this auspicious Day, #VelsFilmInternational Elated to announce a collaboration with dear @SilambarasanTR_ & director @menongautham for a film beginning very soon from a really brilliant script. More exciting details will follow. #PositiveVibes #SilambarasanTR47 @IshariKGanesh pic.twitter.com/9m8MIMcvDl
— Vels Film International (@VelsFilmIntl) January 28, 2021