சிம்பு படங்கள்தான் பிரச்சனைக்கே காரணம் ! - ஆர்.கே.செல்வமணி !
தயாரிப்பாளர், பெப்சி சங்கத்துக்கு இடையேயான பிரச்சனைக்கு சிம்புவின் படங்கள்தான் காரணம் என ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

By : Mohan Raj
தயாரிப்பாளர், பெப்சி சங்கத்துக்கு இடையேயான பிரச்சனைக்கு சிம்புவின் படங்கள்தான் காரணம் என ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆர்.கே.செல்வமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவு குறித்த எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை, நான் தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
சிம்பு நடிக்கும் நான்கு படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை இருப்பதால் அவர் படங்களுக்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டது. அதன்படியே நாங்கள் நடந்து வந்தோம். தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தனது படத்தின் வெளியூர் படப்பிடிப்புக்கு நான்கு நாள் மட்டும் அனுமதி கேட்டார். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் அனுமதி தந்த பிறகே அந்த படத்தில் பெப்சி தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.
இரண்டு சங்கங்களுக்கு இடையிலான எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் மீறவில்லை" என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
