தனுஷ், வெங்கட் பிரபுதான் காரணம் - சுசித்ரா பகீர் புகார்
சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு தன்னை அவதூறு பரப்பிவரும் பயில்வான் ரங்கனதன் பின்னணியில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இருப்பதாக பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு தன்னை அவதூறு பரப்பிவரும் பயில்வான் ரங்கனதன் பின்னணியில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இருப்பதாக பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் பிரபல பாடகி சுசித்ரா இவர் பல திரைப்படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார் அதில் யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் என்பவர் என்னை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'மனநலம் பாதிக்கப்பட்டவர், போதைக்கு அடிமையானவர், வாய்ப்புக்காக பாலியல் இச்சைக்கு உட்படுவர் என எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்' இதன் பின்னணியில் என் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோர் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர் நான் தனியாக வசித்து வருகிறேன் இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது பயில்வான் ரங்கநாதன் மீதும் அவர் பின்னால் இருக்கும் நபர்கள் மீதும் தீர விசாரித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என புகாரில் கூறியுள்ளார்.