சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தமிழக அரசின் முக்கிய விருது.! முழு பட்டியல் இதோ..!
சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தமிழக அரசின் முக்கிய விருது.! முழு பட்டியல் இதோ..!

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது அளித்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றியவர்களின் கலைமாமணி விருது பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மேலும் பல முக்கிய நட்சத்திரங்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் நட்சத்திரங்களின் பட்டியல்கள் இதோ: 80, 90 களில் முன்னணி நடிகையாக இருந்த சரோஜாதேவி, சௌகார் ஜானகி, ஜமுனா ராணி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ராமராஜன், சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தேவதர்ஷினி, தொலைக்காட்சி நடிகர் நந்தகுமார்.
மேலும் தொலைக்காட்சி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ், நடிகை நித்யா, நடிகை மதுமிதா, இயக்குனர் லியாகத் அலிகான், இயக்குனர் மனோஜ்குமார், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர், நடிகர் ரவி மரியா, வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, இசையமைப்பாளர் தீனா, இசையமைப்பாளர் டி.இமான், கோமகன், படத்தொகுப்பாளர் அந்தோணி, நடன இயக்குநர் சிவசங்கர், நடன இயக்குனர் ஸ்ரீதர், ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம், ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ், பாடலாசிரியர் காமகோடியான், பாடலாசிரியர் காதல் மதி, ஆகியோர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.