Begin typing your search above and press return to search.
தடையை மீறி படப்பிடிப்பு - சிவகார்த்திகேயன் படக்குழுவினர் மீது வழக்கு
A case filed against sivakarthhikeyan's team.
By : Mohan Raj
தடையை மீறி படப்பிடிப்பு நடத்தியதற்காக சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் 'ஷூட்டிங்' நடந்தது. இதைக்காண, நுாற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி திரண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் 'ஷூட்டிங்கை' நிறுத்தினர். அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், பல அரசு துறைகளிடம் அனுமதி பெறாமல் 'ஷூட்டிங்' நடத்தப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து 19,400 ரூபாய் அபராதம் விதித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story