சிவகார்த்திகேயன் பட கதாநாயகி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் re-entry.!
சிவகார்த்திகேயன் பட கதாநாயகி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் re-entry.!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.அந்தவகையில் அட்லி தயாரிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான’சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு பின் கடந்த மூன்று ஆண்டுகளாக வேறு படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது மீண்டும் இளம் நடிகருடன் கைகோர்க்கிறார்.
நடிகை ஸ்ரீதிவ்யா இதுவரை வருத்தப்படாத வாலிபர் சங்கம், வெள்ளக்கார துரை, காக்கி சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா தற்போது தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதர்வா நடித்த பாணா காத்தாடி, செம போத ஆகாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.
இது ஒரு அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் இந்த படத்தில் பிசியோதெரபி மருத்துவராக ஸ்ரீதிவ்யா நடிப்பதாகவும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவிருப்பதாகவும், திருவல்லிக்கேணி, வடசென்னை, கட்ச், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் படத்தின் இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.