Kathir News
Begin typing your search above and press return to search.

காமெடியில் இருந்து அதிரடிக்கு தாவிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அதிரடி கதை ஒன்றில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

காமெடியில் இருந்து அதிரடிக்கு தாவிய சிவகார்த்திகேயன்

KarthigaBy : Karthiga

  |  5 May 2023 10:45 AM GMT

சிவகார்த்திகேயன் 'மாவீரன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் நாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். மிஷ்கின் வில்லனாக வருகிறார். சரிதா, தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .இந்த படத்தை மடோன் அஸ்வின் டைரக்ட் செய்துள்ளார். இவர் 'மண்டேலா' படத்தை இயக்கி பிரபலமானவர். மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் தோற்றம் சீன் ஆ சீன் ஆ பாடல் ஆகியவை ஏற்கனவ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது .


இது அதிரடி சண்டை காட்சிகளுடன் குடும்பப் படமாக உருவாகியுள்ளது .படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ளார் . இசை பரத் சங்கர், ஒளிப்பதிவு வித்து அய்யன்னா. தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது. 'மாவீரன்' படம் இதுவரை நான் செய்யாத புதிய கதைக்களம். இந்த கதைக்களத்திற்கு ஏற்ப ஷூட்டிங் செய்ய மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது என்றார் சிவகார்த்திகேயன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News