பிக்பாஸ் அர்ச்சனா வீட்டில் நடந்த விசேஷம்: கலந்துகொண்ட ஆரி!
பிக்பாஸ் அர்ச்சனா வீட்டில் நடந்த விசேஷம்: கலந்துகொண்ட ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பு ஜெயிக்கும் என்று 75 நாட்கள் வரை இருந்தவர் அர்ச்சனா.அவர் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வாரத்தில் வந்திருந்தாலும்,அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியால் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனா, சமீபத்தில் அவரது வீட்டில் நடந்த ஒரு விசேஷத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்ததற்கு பிக்பாஸ் போட்டியாளர்களான சம்யுக்தா, நிஷா, ஆஜித், ரமேஷ், ஆரி கேப்ரில்லா என பலர் வந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் முழுக்க முழுக்க உற்சாகமாக விழாவை சிறப்பித்தனர்.மேலும் ஆரி உள்பட அனைவரும் குத்தாட்டம் ஆடிய வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.