Kathir News
Begin typing your search above and press return to search.

இளையராஜா இசையில் ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - விரைவில் திரையில்

இசைஞானி இளையராஜா இசையில் ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு படமாக தயாராகியுள்ளது.

இளையராஜா இசையில் ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - விரைவில் திரையில்

KarthigaBy : Karthiga

  |  18 April 2023 11:15 AM GMT

ஸ்ரீ ராமானுஜர் என்ற மிகப்பெரிய மகானின் வாழ்க்கை வரலாறு இசைஞானி இளையராஜாவின் இசையில் சினிமா படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீராமானுஜர் கதாபாத்திரத்தில் டி.கிருஷ்ணன் நடித்துள்ளார். அவரே இதற்கான திரைகதை எழுதி தயாரித்துள்ளார் .


ராதாரவி , கோட்டா சீனிவாசராவ், ஒய்.ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன் அனுகிருஷ்ணன் ,காயத்ரி, சோனியா சிங் வால ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரவி.வி.சந்தர் டைரக்ட் செய்துள்ளார். படம் குறித்து ராமானுஜராக நடித்த டி.கிருஷ்ணன் கூறும்போது இது முழுக்க முழுக்க ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம்.ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல இந்து தர்மத்தின் சகாப்தம் ஆவார்.


சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும். எல்லா மதத்தினருக்கும் நற்கதி வேண்டும் என்ற உணர்வை மக்களிடையே உருவாக்கியவர். இந்த மாபெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை இளையராஜாவின் இசையோடு நினைத்து காவியமாக உருவாக்கியுள்ளோம். வரலாற்று படம் என்பதால் மிகுந்த சிரமப்பட்டு எடுத்துள்ளோம் .படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். ஒளிப்பதிவு மாதவராஜ் .படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News