'தமிழின் பெயரைச் சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்' - இயக்குனர் மோகன்ஜி ஆவேசம்
'ஹிந்தி ஏற்கமாட்டோம்! ஆனால் ஹிந்தி படங்களை இயக்கத் துடிப்போம்' என சில இயக்குனர்களை சாடியுள்ளார் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி.

'ஹிந்தி ஏற்கமாட்டோம்! ஆனால் ஹிந்தி படங்களை இயக்கத் துடிப்போம்' என சில இயக்குனர்களை சாடியுள்ளார் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி.
திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்த படமாக 'பகாசுரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்தநிலையில் இயக்குனர் மோகன்ஜி தற்பொழுது நடைபெற்று வரும் ஹிந்தி குறித்த விவாதம் இதை பற்றி கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது, 'இந்திய ஏற்க மாட்டோம்! ஆனால் ஹிந்தி படங்களை இயக்க துடிப்போம், இந்தி படிக்க புடிக்காது ஹிந்தி நடிகர் நடிகைகளை தமிழ் நடிகை வைப்போம். இந்தி பேச பிடிக்காது ஆனால் தமிழ் படங்களை இந்தியில் மொழிபெயர்த்து நாம் லாபம் அடைவோம் தமிழ் பெயரை சொல்லி ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் இப்படி பேசும் எந்த சினிமா பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழி பாடத்தில் படிக்க வைப்பதில்லை. அப்படி படிக்க வைப்பவர்கள் இதை பேசட்டும் ஆதரவு தரலாம்' என ஒரு அதிரடி கருத்து வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.