சிம்பு'வின் அசாத்திய உடல்மொழி - வைரலாகும் புகைப்படம் !
Simbu movie updates.

By : Mohan Raj
சிம்பு'வின் சமீபத்திய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்ச்சை என்றாலே சிம்பு, சிம்பு என்றாலே சர்ச்சை என்ற காலமெல்லாம் இப்பொழுது மாறிவிட்டது. அடுத்தடுத்த படங்கள் படப்பிடிப்பு ஆரம்பம், படத்துக்கு படம் உடல் தோற்ற வித்தியாசம், உடல்மொழி'யில் மாற்றம், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் பாராட்டுக்கள் என சிம்பு திரையுலகை ஆள துவங்கியிருக்கிறார்.
இப்பொழுது மாநாடு படப்பிடிப்பை முடித்து விட்டு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தி 'வெந்து தணிந்தது காடு' படத்தை துவங்கிவிட்டார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தன் உடல் எடையை முற்றிலுமாக குறைத்து தனித்துவமாக தெரியும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அருகில் சில காலம் முன்பு சிம்பு உடல் பருமனாக இருந்ந புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
