சூர்யாவின் 40-வது படத்தின் சூப்பர் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
சூர்யாவின் 40-வது படத்தின் சூப்பர் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
By : Amritha J
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் பல படங்களில் நடித்து அப்படங்கள் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே தற்போது 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து இவரது 40-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் சமூக வலைத்தளத்தில் 'சூர்யா 40' படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று இமான் அவரது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர், நடிகைகளின் தேர்வும் நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Music Director @immancomposer will be composing the music for #Suriya40bySunPictures@Suriya_offl #DirectorPandiraj #Suriya40 pic.twitter.com/h5SVfv5pTZ
— Sun Pictures (@sunpictures) January 24, 2021