Kathir News
Begin typing your search above and press return to search.

'சினிமா போதும் விலகி விடலாம்' சூப்பர் ஸ்டாரின் இந்த முடிவு உண்மையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா போதும் விலகி விடலாம் சூப்பர் ஸ்டாரின் இந்த முடிவு  உண்மையா?

KarthigaBy : Karthiga

  |  21 May 2023 11:30 AM GMT

ரஜினிகாந்த் கைவசம் தற்போது ஜெயிலர், லால்சலாம் படங்கள் உள்ளன. ஜெயிலர் பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. லால் சலாம் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் ரஜினியுடன் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பிரபல டைரக்டர் மிஸ்கின் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி நடிக்க உள்ள 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டர் செய்ய இருப்பதாகவும் இதுதான் ரஜினி நடிக்கும் கடைசி படம் என்றும் தெரிவித்திருந்தார் . இது சமூக வலைதளத்தில் பரபரப்பானது. 171 வது படத்தோடு ரஜினி சினிமாவை விட்டு விலகப் போகிறாரா? என்றும் கேள்விகள் எழுப்பினர்.


இது குறித்து ரஜினியின் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது 'ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை சொல்லலாம் ஆனால் இந்த விஷயத்தில் ரஜினி மட்டுமே முடிவெடுப்பார். அவர் என்ன செய்வார் என்பதை மற்றவர்கள் சொல்ல முடியாது. ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்டு லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஓரிரு படங்களில் நடிக்க ஒப்புதல் கொடுத்து இருக்கிறார் ' என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News