சாமானியர்கள் முதல் பிரதமர் வரை வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார் !

பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாமானியன் வரை பிறந்தநாள் வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு இன்று (டிசம்பர் 12) 71'வது பிறந்த நாள். இதனை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சாமானியர்களும் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தனது திறமையான நடிப்பு, படைப்பாற்றல் மூலம் மக்களை தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தட்டும். அவருக்க நீண்ட வாழ்நாளையும், நல்ல உடல்நிலையையும் கடவுள் அளிக்கட்டும்" என்றார். மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறும்போது, "மகா அவதார் பாபாஜி அருள் கிடைக்கட்டும்" எனவும் வாழ்த்தினார்.