Kathir News
Begin typing your search above and press return to search.

பி.வாசு இயக்கத்தில் சரித்திர படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களில் பி வாசு இயக்கத்தில் நடித்தார்.

பி.வாசு இயக்கத்தில் சரித்திர படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Mohan RajBy : Mohan Raj

  |  15 Jan 2023 8:32 AM GMT

ரஜினிகாந்த் பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களில் பி வாசு இயக்கத்தில் நடித்தார். இதற்குப் பிறகு இவர்கள் சந்திரமுகி 2 படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கதையில் பெரிய நம்பிக்கை இல்லாததால் அந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் நாயகனாக வைத்து பி.வாசு இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகை கங்கணாவத் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.




பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன் போன்ற பல சரித்திர கதைகள் சமீப காலமாக உருவாகி பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. ஆதலால் சரித்திர படத்தில் நடிக்கும் ஆர்வம் ரஜினிக்கு மேலோங்கி இருக்கிறது. இதன் காரணமாக தனது ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் ஒரு சரித்திர கதையில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.




ரஜினி நடிக்கும் அந்த சரித்திர படத்திற்கு பி.வாசு இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வகையில் பி வாசு இயக்கத்தில் ரஜினியின் 171 வது பாடம் உருவாகும் என்று தெரிகிறது. இந்தப் படமும் கிட்டத்தட்ட ஹாரர் கலந்த சரித்திர கதையில் சந்திரமுகி பாணியில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News