Kathir News
Begin typing your search above and press return to search.

வைரலாகும் சூர்யாவின் புதிய தோற்றம் - எதற்காக இந்த எடை கூடிய மாற்றம்?

புதிய படத்துக்காக சூர்யா தனது எடையை அதிகரித்துள்ளார். அந்த புகைப்படம் சமீபத்தில் வைரலாகி வருகிறது

வைரலாகும் சூர்யாவின் புதிய தோற்றம் -   எதற்காக இந்த எடை கூடிய மாற்றம்?

KarthigaBy : Karthiga

  |  12 May 2023 10:45 AM GMT

சூர்யா தரமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக உடல் அமைப்பையும் மாற்றிக் கொள்கிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் அவரது நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தன. சூரரை போற்றுப் படத்தில் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார்.


தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார் . இது அவருக்கு 42 - வது படம். சூர்யாவின் ஜோடியாக இந்தி நடிகை திஷா பததானி நடிக்கிறார் . படம் 3-D தொழில்நுட்பத்தில் அதிகபட்ச பொருள் செலவில் தயாராகிறது .கங்குவா பாடத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 10 மொழிகளில் இந்தப் படம் தயாராவது சிறப்பு அமசம் .சரித்திர கதை அம்சத்தில் உருவாவதாக கூறப்படுகிறது.


படபிடிப்பு கொடைக்கானல் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா பல தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் இருக்கும் சூர்யாவின் தோற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் உடல் எடை கூடி தாடி மீசையில் இருக்கிறார். புகைப்படம் வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News