Kathir News
Begin typing your search above and press return to search.

சூர்யாவின் புதிய படத்தின் தோற்றம்-இணையதளத்தில் வைரல்

சூர்யாவின் கங்குவா படத்தின் தோற்றம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

சூர்யாவின் புதிய படத்தின் தோற்றம்-இணையதளத்தில் வைரல்

KarthigaBy : Karthiga

  |  15 Nov 2023 8:30 AM GMT

சூர்யா வித்தியாசமான கதை கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.தற்போது சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடிக்கிறார். ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு , ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஜெகபதிபாபு பாபி தியோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ரூபாய் 350 கோடி செலவில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு , ஹிந்தி, கன்னடம் , மலையாளம் உட்பட பத்து மொழிகளில் வெளியிடுகிறார்கள்.


சரித்திர கால கதையம்சத்தில் அதிரடி சண்டை படமாக உருவாகிறது. இந்த நிலையில் கங்குவா படத்தில் வரும் சூர்யாவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். இந்த தோற்றம் வலைதளத்தில் வைரல் ஆகிறது. கங்குவா படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News