சூர்யா 40: படம் பற்றிய முக்கிய தகவல்! குவியும் வாழ்த்துக்கள்!
சூர்யா 40: படம் பற்றிய முக்கிய தகவல்! குவியும் வாழ்த்துக்கள்!
By : Amritha J
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. அந்த வகையில் சூரரை போற்று என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படம் பற்றி ஒரு முக்கிய தகவல் வந்தது.
மேலும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார். டி. இமான் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை அதிகாரபூர்வமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரது ட்வீட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளது.சமீபத்தில் கொரோனாவில் இருந்து குணமான சூர்யா இன்றைய பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்றும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தயாரிப்பாளர் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படப்பிடிப்பில் படத்தின் இயக்குனர், சத்தியராஜ், சரண்யா, பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.
#Suriya40BySunPictures shoot begins!@Suriya_offl will join the sets soon!#Suriya40Poojai #Suriya40 pic.twitter.com/qZ59mE5crl
— Sun Pictures (@sunpictures) February 15, 2021