Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர் ஹீரோ'வாக சூர்யாவை மாற்ற போகும் லோகேஷ் கனகராஜ் !

Cinema News.

சூப்பர் ஹீரோவாக சூர்யாவை மாற்ற போகும் லோகேஷ் கனகராஜ் !

Mohan RajBy : Mohan Raj

  |  31 Aug 2021 7:00 AM GMT

நடிகர் சூர்யா'வை சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு மாற்ற போகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.





இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூன்றே படங்களில் உச்சம் தொட்ட இயக்குனர். இன்றைக்கு தமிழ் சினிமாவில் நடிகர்கள் தேடும் இயக்குனராக உயர்ந்துள்ளார். தற்பொழுது கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரை வைத்து பிரம்மாண்ட படைப்பை எடுத்து வருகிறார்.





இந்நிலையில் மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஷ்கின், சசி, வசந்த பாலன், கவுதம் மேனன், பாலாஜி சக்திவேல், ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகிய 11 இயக்குனர்கள் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதல் படம் இயக்கும் வாய்ப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். இதில் நடிகர் சூர்யா'வை சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News