சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படம் நிறுத்தப்பட்டதா - கலைப்புலி எஸ் தாணு விளக்கம்.!
சூர்யாவின் 'வாடிவாசல்' திரைப்படம் நிறுத்தப்பட்டதா - கலைப்புலி எஸ் தாணு விளக்கம்.!
By : Amritha J
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா இந்த மாதம் இவருடைய சூரரைப்போற்று திரைப்படம் வெளிவந்தது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அதனை அடுத்து இவரின் நடிப்பில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சூர்யா இந்த படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு பாண்டியராஜன் இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டதாகவும்,வெற்றிமாறன் சூரி நடிக்கும் படத்தை இயக்க சென்று விட்டார் என்ற வதந்தி வேகமாக பரவி வருகிறது.
இதனை அடுத்து வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணுவின் பெயரில் போலி ட்விட்டர் அக்கவுண்ட் மர்ம நபர்கள் சிலர் ’வாடிவாசல்’ திரைப்படம் டிராப் என்று பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இதை அறிந்த தாணு அவரது ட்விட்டர் பக்கத்தில் எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் (@VetriMaaran) இயக்கத்தில் சூர்யா (@Suriya_offl) நடிப்பில் “வாடிவாசல்" வலம் வரும் வாகை சூடும் #Vaadivasal #StopSpreadingFakeNews என்று பதிவிட்டிருக்கிறார்.