டெல்லியில் உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்! ரசிகர்கள் வரவேற்பு!
டெல்லியில் உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்! ரசிகர்கள் வரவேற்பு!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவு பாலிவுட் வட்டாரங்களை உலுக்கியது. அவரது மரணத்திற்கு திரைத்துறையினரே காரணம் என அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். முதன் முதலாக கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தார்.
இதனை தொடர்ந்து அவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. திரைத்துறையில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் துரதிஷ்டவசமாக தற்கொலை முடிவை எடுத்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆண்ட்ரூஸ் கஞ்ச் சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சுஷாந்தின் ரசிகர்கள் மற்றும் பீகாரைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், பெயர் மாற்றம் குறித்து ஆண்ட்ரூஸ் கஞ்ச் மாநகராட்சி கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்புக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிறிய காலத்தில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் சுஷாந்த் சிங் என்பது யாரும் மறுக்க முடியாது.